புதன், 10 ஆகஸ்ட், 2016

செவ்வாய், 26 ஜூலை, 2016

entha vaalnaadkalin enpathu padikal


  வாழ்நாட்களின்  எண்பது  ஆண்டு  பார்வை  :  "குணச்சித்திரம்  80"

காலையும் மாலையும்  , நாட்களின்  எண்ணிக்கை ,வாரம் ,மாதம்  ,ஆண்டு
என  ,கவனிப்பற்று  , நாடி  ,வினாடி ,நிமிடம் ,மணித்துளிகள்  அடங்கிய ஓர்
கணக்கு ,ஒவ்வொரு மனிதனின் உயிர் வாழ்க்கை அளவு  கோலாக , படைக்கின்ற காலத்தின்  அளவு  , என்று கற்பனை  தோற்றம் ,என்று  கருதினாலும்  ,ஏனைய  உயிரினங்களிலும் ,மனிதனின்  அறிவு ,சிந்தனை ,மனோ  வேகம்  ,முழுமையாக  வேறுபடுவதும்  ,உணவு ,உறக்கம் ,உணர்வு
கடந்த நோக்கு , மனம் ,மூளை , உணர்வுக ளின்  தேவை , அவற்றை ,நேரிய
முறையில்  கவனித்து , காத்து ,உயர்வதும் , அனைத்துக்கும் மேலாக  ,வாழ்க்கை யின்  ,பொருள் ,வாழும் உலகின் , இயற்கை கோட்ப்பாடு ,புரிதலும்
காத்து ,உதவும் வழிகளை  தெரிந்து ,தன்னுள்  ,பொறுப்புகளை  உணர்ந்து
மதித்தலும் , காத்து  , உதவி  மகிழ்ந்து ,வாழ்ந்து ,உயிர்வாழ்வை  நிறைவு காண்பதும் என  ,வரும் போது , மனிதனே மாறுபடும் போது ,பிற உயிரின
முரண்பாடு என்பதில் ஆச்சரியம் இல்லையே !

இயற்கை யின்  ,உயர்ந்த ,ஒப்பற்ற  அறிவார்ந்த படைப்புக்களில்  ,மனிதனே
சிறப்பு வாய்ந்தது . மனிதன் , தனது ,இடையறா அறிவின்  முயற்சியால்
விடா  உழைப்பால் ,ஆராய்ச்சியால் , இயற்கையின் ஒவ்வொரு  கூறையும்
அவற்றின்  இயல்புகளையும் , கண்டறிய  முயன்று  முழுமையாக  வெற்றி
பெறாவிட்டாலும் , மற்றெந்த  உயிரினங்களும் ,எண்ணி  பார்க்க  முடியாத
அளவிற்கு  முன்னேறியுள்ளான் ,என்பதற்கு  ,நேற்றும் இன்றும்  வாழ்ந்த -
வாழும்  தலைமுறையின்  சாதனைகள் போற்றுதலுக்கு  உரியதாயினும்  ,
முடிவானதென்று கூறிவிட முடியாது !
தோற்றம்  பெற்ற  உயிர் இனங்கள்  பலவும் , இன்று ,தத்தமது  இருப்பை
நிலை பெற  செய்யாது  ,அழிந்து ,மறைந்து போயின . இதில் ,மிருகங்கள்
பறவைகள் ,தாவரங்கள் ,நீரில் ,நிலத்தில்  வாழ்வனவும்  அடங்கும்
ஆயினும் ,மனிதன் தனது கோடான கோடி வருடம் ,யுகம் தாண்டியும்
நிலைத்து  வாழ்வதென்பது ,முழுமை என்று கூற முடியாது ! பூமிப்பந்தில் ,
வாழ்ந்து ,அழிந்து  ,மறைந்து போன மனித இனங்களின்  தலை முறைகள்
பல  இருந்தன !
மனிதனும்  மொழியும்
மனத்தால்  நினைப்பதும்  ,வாயால் மொழிவதும் ,காதுகளினால்  கேட்டு
புரிந்து  கொள்ள  உதவும் ,ஓர்  தொகுதி மக்களின் ,ஒலிக்  குறியீடு  என்பதே
மொழி  ,எனப்படும் . உலகில் , உள்ள மொழிகள்  6000 வரை என ,கூறுவார் .
இவற்றுள்  பல மறைந்தும் ,வேறுசில பேச்சு  மொழி  நிலை இழந்தும் ,இன்னும்  சில எழுத்து வடிவம் அற்றும் , ஆட்சி  நிலை இன்றி ,வளர்ச்சி
இன்றியும் , அழிந்து கொண்டும் ,தன்  நிலை  மாறியும் , உள்ளன .
ஒருவனின் ,முதல்  அடையாளம் ,அவனது தாய் மொழி என்பதை ,அவனது
தாய் ,தந்தை பேசும் -பேசிய  மொழி என்ற விளக்கம் ,ஏற்க முடியாத ஒன்று !
அதற்கு  காரணம் , இன்று ,மக்கள் , சொந்த -பிறந்த , தனது ,முன்னோர்கள்
வாழ்ந்து ,வளர்த்து ,காத்து ,அளித்த ,ஓர் இனத்தின் ,தனி அடையாளமாகி ,
நிலைத்த ,மொழிக்  குறியீடு ஆகிய மொழி என்பதென்பதை ,மறைக்க ,"தாய்-தந்தை " மொழி  என்று கூறுவது ,தலை -கால் - அற்ற ,முண்டம்
என்றே  கூறவேண்டும்








சனி, 9 ஆகஸ்ட், 2014

ப .நா .த .உ . 3ம் மாநாடு ,12.08.1993 - 15.081993,பெர்லின் ,ஜெர்மனி ,

ப .நா .த .உ . 3ம்  மாநாடு ,12.08.1993 - 15.081993,பெர்லின் ,ஜெர்மனி ,

 21ம் .ஆண்டு ,நிறைவு மீட்டல் - 3, 4 ,நாள்  நிகழ்ச்சி  -15.08.1993, இறுதி .நாள் ,
மாநாட்டில் , மறைந்த ,முத்தமிழ் ,காவலர் , கி .ஆ .பி ,விசுவநாதம் ,அவர்கள்
ஆற்றிய ,நிறைவுரை ,எல்லோரின் ,நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும் !முதல் நாள் ,திருவள்ளுவர் , அரங்கம் ,இரண்டாம் ,தனிநாயகம்  அடிகள் ,அரங்கம் ,மூன்றாம்  நாள் ,நிகழ்சிகள்  விபுலானந்த அடிகளார் அரங்கம் ,நான்காம் நாள்
ஆகிய நிறைவு நாள் ,அரங்கம் மறைமலை அடிகளார் அரங்கம் ,என ,விளங்கின !இயல் ,இசை ,நாடகம் ,என்ற ,முத்தமிழ்  வித்தகர் பலரும் ,தத்தம் கருத்துகளை ,முன் வைத்து ,இனிய அரிய உரைகள்  ஆற்றினர் !மறைவாக
" நமக்குள்ளே ,பழங்கதைகள் பேசுவதில் மகிமை இல்லை , மகிமை பெறவேண்டுமெனின் , வெளிநாட்டார் , தமிழ் பெருமை அறிய வகை செய்ய
தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் !" என  பாரதி மொழிந்த வாக்கிற்கேற்ப ,பெர்லின் வீதிகளில் ,தமிழர் நெஞ்சங்களில் ,தமிழ் வெள்ளம், அன்று  கரை புரண்டு  பாயந்தது !


 மாநாட்டு ,பொறுப்பாளர் .தமிழ் அறிஞர் ,பலருக்கும் ,நான்கு
நாளும் ,தமிழர் உணவு ,சிற்றுண்டி ,
பானம் ,வழங்கி ,வசதிகள்
 தரபட்டன .

சனி, 2 ஆகஸ்ட், 2014

பன்னாட்டு ,தமிழ் உறவு ,மூன்றாம் , உலக மாநாடு , பெர்லின் , 12.08. ​ - 15.08 .1993 , நினைவு மீட்டல்

 பன்னாட்டு ,தமிழ் உறவு ,மூன்றாம் , உலக  மாநாடு ,
 பெர்லின் , 12.08. ​ - 15.08 .1993 , நினைவு  மீட்டல் 
  


            இற்றைக்கு ,இருபத்தைந்து  ஆண்டுகளுக்கு . முன்னர் ,ஜேர்மன் நாடு ,தனது ,பழைய /
புதிய தலைநகராக , இணைந்த ,இரு ஜேர்மன் நாடுகள் ,ஒன்றாகிய , அகன்ற , ஜேர்மன் , குடிமக்கள் ,அறிவியல் ,மக்கள் எண்ணிக்கை , என ,முன்னணியில் ,இரண்டாம் ,உலக போரின் ,அழிவுகளையும் , இழப்புகளையும் , தாண்டி ,அரை நூற்றாண்டு காலத்தில் , ஏனைய  வளர் முக 
வளர்ந்த ,நாடுகளுடன் , போட்டி போட்டு ,  நிமிர்ந்து , உயர்ந்து வளர்ச்சி கண்டது !பொருளாதாரம் ,
அறிவியல் ,சனநாயகம் , சமத்துவம் , கல்வி ,வாழ்க்கை ,சமயம் , என , தனி மனித விழுமியங்களுக்கு ,பொருள் , கூறி நின்றது! அன்று ,கிழக்கு ,ஜேர்மன் ,உறவுகளுக்கு , உதவும் 
வழியாக , அகதி நிலை வழங்கி உதவும் பொருட்டு ,நாட்டின் ,விதிகள் ,மூலம் , வாழ்வுரிமை ,
வழங்கப்பட்டது .இதன் ,அடிபடையில் , எங்கெங்கு ,உயிர் ,வாழ்வுக்கு ,இடர் , கண்டாலும் ,
அவர்களை .தனது ,நாட்டில் தங்கவும் , தனது ,நாட்டு மக்களை போல , வசதிகள் ,வழங்கி ,
ஏன் ,நிரந்தரக் குடிகளாகவும் ,தக்க காரணங்கள் ,இல்லாவிடின் ,சொந்த நாடுகளுக்கு ,செல்ல 
உதவியும் தந்தார்கள் ,என்பது ,யாவரும் அறிந்த ஒன்று!மேற்கு ,ஐரோப் பிய நாடுகளிலும் 
இந்நிலை ,நிலவினாலும் ,ஜேர்மன் நாட்டின் ,வசதிகள் ,ஏனைய ,நாடுகளில் ,சிறிது ,மட்டம் 
என்றே கூறலாம் !


புகலிட தமிழரின்  ஜேர்மன் வருகை 

தமது ,தாய் ,நாட்டில் , நிலவிய ,அசாதாரண ,நிலைமைகளை ,தவிர்க்கும் 
முகமாக , குறிப்பாக ,இளைஞர் ,நடுவயதினர் ,போன்றோர் ,பல்வேறு ,
வழிகளில் ,சென்று ,வாழத் தலைப்பட்டார்கள் !அன்று , திருமணமாகி ,
இளம் மனைவி ,பிள்ளைகள் ,தாய் ,தந்தை ,  உடன்பிறப்பு , உறவு , நட்பு 
என ,பிறந்து ,வளர்ந்து ,கல்வி ,கற்று மகிழ்ந்து ,வாழ்ந்து ,நாற்பது ,தாண்டி 
விட்ட ,என் போன்றோரும் ,ஒருசிலர் ,அதில் அன்று அடக்கம் !,எம்போன்றோர் ,எந்த நோக்கத்துக்காக வந்தோமோ ,அந்த நோக்கத்தில் ,மண் விழுந்த கதை 
போல ,இரண்டு ஆண்டு களுக்கு ,வேலை செய்ய முடியாது " ,என்ற தடை விதிக்க பட்டது !கண்ணில் கண்டவளை ஆசைகொண்டு ,கட்டியவளை  கைவிட்ட கதை ,போல ,ஆகிவிட்டதே , பொருளும் அழிந்து போனதே ,என்ற   
கவலை ,ஏற்பட்டு ,"போன மச்சான் ,திரும்பி வந்தான் பூமணத்தோடு ..."என்று 
ஊர் ,திரும்பி போனவர் பலர்!இரண்டு வருடங்கள் முடிய ,சிறிய வேலைகள்  
செய்ய அனுமதி கிடைத்து ,"தொழில் " ஈடுபட்டு ,வருவாய் ,வீடு ,வசதி ,குடும்பம் என  வாழ்க்கை ,ஆரம்பமாகியது ! இளைய வயதினர் ,திருமண ம் ,செய்ய ,ஆர்வம் காட்டினர் !இதே ,நடை முறை ,ஏனைய  ஐரோப்பிய ,நாடுகளிலும் ,இருந்தாலும் ,அனைவரும் ,லண்டன் ,சென்று ,அடைய ஆவல் கொண்டவர்களாக மாறி , அவதிகளை ,சந்தித்தனர் !வேறு சிலர் ,கனடா ,அமெரிக்கா ,மற்றும் உறவினருடன் ,இணைய விரும்பி யும் ,திருமணம் செய்யும் பொருட்டும் நாடு கடந்தனர் !

திங்கள், 21 ஜூலை, 2014

ப.நா .த .உ .மாநாடு .பெர்லின் ,12.08.193-15.08.1993 ,21ம் ,ஆண்டு ,நிறைவு -மீட்டல்



 முத்தமிழ் ,காவலர் ,மறைந்த , கி..ஆ .பெ , விசுவநாதம் ,மறைந்த நீதியரசர் ,
 பி .வேணுகோபால் ,ஆகியோர் ,மாநாட்டின் ,நிறைவு ,நாள் ,15.08.1993 பெர்லின் மாநாட்டு ,அமைப்பாளர் குணரத்தினம் தம்பதியினருக்கு ,பொன்னாடை ,
போர்த்தி ,கவுரம் செய்து , ,தமிழ் நாடு மூதறிஞர் ,குழுவின் ,"உலகின் சிறந்த
தமிழர் ,1994" என்ற ,விருதிற்கு ,டாக்டர் ,முத்துசாமி (கனடா ) அவர்களின்
அறக்கட்டளையின் ,கீழ் ,வழங்குமாறு ,முன்மொழிந்து ,அறிவித்தார்கள் .
. பின்பு ,புதுவை ,வி .நாராயணசாமி ,அவர்கள் ,வழிமொழிந்து ,ஏகமனதாக ,தீர்மானித்து 26.8.194,அன்று ,பெரியார் ,திடலில் ,இடம்பெற்ற ,விழாவில் ,
" உலகின் ,உன்னத தமிழர்" என்ற விருதும் ,25000/- ரூபா ,பொற்கிழியும்
வழங்கி ,சிறப்ப செய்தார்கள் ,இவ் விழாவிற்கு ,உயர் நீதிமன்ற நீதியரசர்
 தலைமை ,தாங்கினார் .

 ,

ஞாயிறு, 13 ஜூலை, 2014

ப .நா .த .உ .3ம் மாநாடு ,21ம் ஆண்டு நிறைவு , மீட்டல்

இணைந்த ,ஜேர்மன் ,நாட்டின் ,புதிய தலை நகர் ,பெர்லின் ,பண்பாட்டு ,
பரிமாற்றுக்கான ,நிலையத்தின் , நவீன மண்டபத்தில் ,முதல் ,நிகழ்வாக
12.08. 15.08.1993, ஆகிய ,நான்கு ,நாள் ,சிறப்பாக நடந்தேறிய ,வரலாற்று
சிறப்பு ,மாநாடு ,புலம் பெயர் ந்து ,ஜேர்மன் நாட்டில் ,சிறப்பாக ,பெர்லின்
வாழ் ,தமிழர் ,தம் மொழி .பண்பாடு ,கலை ,என ,ஐரோப்பிய ,நாட்டு ,மக்களுக்கு
எடுத்து காட்வும் ,அதே ,நேரத்தில் ,வருங்கால ,இளைய தலை முறையினர்
தமது ,சொந்த ,அடையாளங்களை ,மறந்து பிற மொழி ,பண்பாடு களில் .தம்மை ,,அடையாளம் புரியாது ,தடுமாற்றம் கொள்ளாமலும் ,வாழ தூண்டும்
நோக்கில் ,இம்மாநாடு ,நடேந்தேறியது .


நான்கு நாள் மாநாடு - முதல் நாள் -12.08.1993.

"தமிழுணர்வு ,கரை புரண்டோட ,,தமிழுறவு புதுபொலிவு ,உற , இம்  மாநாட்டில் ,உரை ,ஆற்றிய , தமிழ் அறிஞர்கள் ,குறிப்பாக ,உலகத் தமிழர்கள் மீதும் .
முத்தமிழ்  மீதும் ,தணியாத ,பற்றுடன் ,90 அகவை ,தாண்டிய ,நலையில் ,
விமானம் ,ஏறி ,வந்து ,மாநாட்டினை ,திறந்து வைத்து ,தலைமை,தாங்கி ,தலைமை உரை, சிறப்புரை ,நிறைவுரை ,என ,நான்குநாள் ,நிகழ்சிகளிலும்
உடன் ,இருந்து , ஆற்றிய ,பேருதவி ,எமக்கு பெரும் பேறாகும் .அப்பெரியாருடன் ,உடன் ,பயணித்து ,கலந்து ,கொண்ட ,நோக்க உரை
ஆற்றிய ,திரு பெரும் கவிக்கோ ,வாமு .சேதுராமன் ,தமிழ் நாடு ,சட்டமன்ற
தலைவர் ,பேராசிரியர் ,மு..தமிழ்குடிமகன் ,நீதியரசர் ,பி வேணுகோபால் .
டாக்டர் ,கே .கண்ணப்பனார் ,பேராசிரியர் ,க .ப .அறவாணர் ,பேராசிரியர் ,
இசை புலவர் ,இரா .திருமுருகன் ,புதுவை ,நீதியரசர் ,இரா .கோவிந்தசாமி ,
சட்ட வல்லுநர் ,வி .நாராயணசாமி, பேராசிரியர்,சக்திபுயல் ,திரு .மதுரகவி .
ஓவியர் ஜெயப்ரகாஷ் ,கலந்து கொண்டார்கள் .

இரண்டாம் நாள் -13.08.1993

முதல் நாள் ,மாநாட்டு ,தொடக்க நிகழ்வாக ,தமிழ் வாழ்த்து ,தமிழ் சிறப்பு
என நடந்தேறின !