வாழ்நாட்களின் எண்பது ஆண்டு பார்வை : "குணச்சித்திரம் 80"
காலையும் மாலையும் , நாட்களின் எண்ணிக்கை ,வாரம் ,மாதம் ,ஆண்டு
என ,கவனிப்பற்று , நாடி ,வினாடி ,நிமிடம் ,மணித்துளிகள் அடங்கிய ஓர்
கணக்கு ,ஒவ்வொரு மனிதனின் உயிர் வாழ்க்கை அளவு கோலாக , படைக்கின்ற காலத்தின் அளவு , என்று கற்பனை தோற்றம் ,என்று கருதினாலும் ,ஏனைய உயிரினங்களிலும் ,மனிதனின் அறிவு ,சிந்தனை ,மனோ வேகம் ,முழுமையாக வேறுபடுவதும் ,உணவு ,உறக்கம் ,உணர்வு
கடந்த நோக்கு , மனம் ,மூளை , உணர்வுக ளின் தேவை , அவற்றை ,நேரிய
முறையில் கவனித்து , காத்து ,உயர்வதும் , அனைத்துக்கும் மேலாக ,வாழ்க்கை யின் ,பொருள் ,வாழும் உலகின் , இயற்கை கோட்ப்பாடு ,புரிதலும்
காத்து ,உதவும் வழிகளை தெரிந்து ,தன்னுள் ,பொறுப்புகளை உணர்ந்து
மதித்தலும் , காத்து , உதவி மகிழ்ந்து ,வாழ்ந்து ,உயிர்வாழ்வை நிறைவு காண்பதும் என ,வரும் போது , மனிதனே மாறுபடும் போது ,பிற உயிரின
முரண்பாடு என்பதில் ஆச்சரியம் இல்லையே !
இயற்கை யின் ,உயர்ந்த ,ஒப்பற்ற அறிவார்ந்த படைப்புக்களில் ,மனிதனே
சிறப்பு வாய்ந்தது . மனிதன் , தனது ,இடையறா அறிவின் முயற்சியால்
விடா உழைப்பால் ,ஆராய்ச்சியால் , இயற்கையின் ஒவ்வொரு கூறையும்
அவற்றின் இயல்புகளையும் , கண்டறிய முயன்று முழுமையாக வெற்றி
பெறாவிட்டாலும் , மற்றெந்த உயிரினங்களும் ,எண்ணி பார்க்க முடியாத
அளவிற்கு முன்னேறியுள்ளான் ,என்பதற்கு ,நேற்றும் இன்றும் வாழ்ந்த -
வாழும் தலைமுறையின் சாதனைகள் போற்றுதலுக்கு உரியதாயினும் ,
முடிவானதென்று கூறிவிட முடியாது !
தோற்றம் பெற்ற உயிர் இனங்கள் பலவும் , இன்று ,தத்தமது இருப்பை
நிலை பெற செய்யாது ,அழிந்து ,மறைந்து போயின . இதில் ,மிருகங்கள்
பறவைகள் ,தாவரங்கள் ,நீரில் ,நிலத்தில் வாழ்வனவும் அடங்கும்
ஆயினும் ,மனிதன் தனது கோடான கோடி வருடம் ,யுகம் தாண்டியும்
நிலைத்து வாழ்வதென்பது ,முழுமை என்று கூற முடியாது ! பூமிப்பந்தில் ,
வாழ்ந்து ,அழிந்து ,மறைந்து போன மனித இனங்களின் தலை முறைகள்
பல இருந்தன !
மனிதனும் மொழியும்
மனத்தால் நினைப்பதும் ,வாயால் மொழிவதும் ,காதுகளினால் கேட்டு
புரிந்து கொள்ள உதவும் ,ஓர் தொகுதி மக்களின் ,ஒலிக் குறியீடு என்பதே
மொழி ,எனப்படும் . உலகில் , உள்ள மொழிகள் 6000 வரை என ,கூறுவார் .
இவற்றுள் பல மறைந்தும் ,வேறுசில பேச்சு மொழி நிலை இழந்தும் ,இன்னும் சில எழுத்து வடிவம் அற்றும் , ஆட்சி நிலை இன்றி ,வளர்ச்சி
இன்றியும் , அழிந்து கொண்டும் ,தன் நிலை மாறியும் , உள்ளன .
ஒருவனின் ,முதல் அடையாளம் ,அவனது தாய் மொழி என்பதை ,அவனது
தாய் ,தந்தை பேசும் -பேசிய மொழி என்ற விளக்கம் ,ஏற்க முடியாத ஒன்று !
அதற்கு காரணம் , இன்று ,மக்கள் , சொந்த -பிறந்த , தனது ,முன்னோர்கள்
வாழ்ந்து ,வளர்த்து ,காத்து ,அளித்த ,ஓர் இனத்தின் ,தனி அடையாளமாகி ,
நிலைத்த ,மொழிக் குறியீடு ஆகிய மொழி என்பதென்பதை ,மறைக்க ,"தாய்-தந்தை " மொழி என்று கூறுவது ,தலை -கால் - அற்ற ,முண்டம்
என்றே கூறவேண்டும்