சனி, 9 ஆகஸ்ட், 2014

ப .நா .த .உ . 3ம் மாநாடு ,12.08.1993 - 15.081993,பெர்லின் ,ஜெர்மனி ,

ப .நா .த .உ . 3ம்  மாநாடு ,12.08.1993 - 15.081993,பெர்லின் ,ஜெர்மனி ,

 21ம் .ஆண்டு ,நிறைவு மீட்டல் - 3, 4 ,நாள்  நிகழ்ச்சி  -15.08.1993, இறுதி .நாள் ,
மாநாட்டில் , மறைந்த ,முத்தமிழ் ,காவலர் , கி .ஆ .பி ,விசுவநாதம் ,அவர்கள்
ஆற்றிய ,நிறைவுரை ,எல்லோரின் ,நெஞ்சங்களிலும் நிலைத்திருக்கும் !முதல் நாள் ,திருவள்ளுவர் , அரங்கம் ,இரண்டாம் ,தனிநாயகம்  அடிகள் ,அரங்கம் ,மூன்றாம்  நாள் ,நிகழ்சிகள்  விபுலானந்த அடிகளார் அரங்கம் ,நான்காம் நாள்
ஆகிய நிறைவு நாள் ,அரங்கம் மறைமலை அடிகளார் அரங்கம் ,என ,விளங்கின !இயல் ,இசை ,நாடகம் ,என்ற ,முத்தமிழ்  வித்தகர் பலரும் ,தத்தம் கருத்துகளை ,முன் வைத்து ,இனிய அரிய உரைகள்  ஆற்றினர் !மறைவாக
" நமக்குள்ளே ,பழங்கதைகள் பேசுவதில் மகிமை இல்லை , மகிமை பெறவேண்டுமெனின் , வெளிநாட்டார் , தமிழ் பெருமை அறிய வகை செய்ய
தமிழ் முழக்கம் செழிக்க செய்வீர் !" என  பாரதி மொழிந்த வாக்கிற்கேற்ப ,பெர்லின் வீதிகளில் ,தமிழர் நெஞ்சங்களில் ,தமிழ் வெள்ளம், அன்று  கரை புரண்டு  பாயந்தது !


 மாநாட்டு ,பொறுப்பாளர் .தமிழ் அறிஞர் ,பலருக்கும் ,நான்கு
நாளும் ,தமிழர் உணவு ,சிற்றுண்டி ,
பானம் ,வழங்கி ,வசதிகள்
 தரபட்டன .

சனி, 2 ஆகஸ்ட், 2014

பன்னாட்டு ,தமிழ் உறவு ,மூன்றாம் , உலக மாநாடு , பெர்லின் , 12.08. ​ - 15.08 .1993 , நினைவு மீட்டல்

 பன்னாட்டு ,தமிழ் உறவு ,மூன்றாம் , உலக  மாநாடு ,
 பெர்லின் , 12.08. ​ - 15.08 .1993 , நினைவு  மீட்டல் 
  


            இற்றைக்கு ,இருபத்தைந்து  ஆண்டுகளுக்கு . முன்னர் ,ஜேர்மன் நாடு ,தனது ,பழைய /
புதிய தலைநகராக , இணைந்த ,இரு ஜேர்மன் நாடுகள் ,ஒன்றாகிய , அகன்ற , ஜேர்மன் , குடிமக்கள் ,அறிவியல் ,மக்கள் எண்ணிக்கை , என ,முன்னணியில் ,இரண்டாம் ,உலக போரின் ,அழிவுகளையும் , இழப்புகளையும் , தாண்டி ,அரை நூற்றாண்டு காலத்தில் , ஏனைய  வளர் முக 
வளர்ந்த ,நாடுகளுடன் , போட்டி போட்டு ,  நிமிர்ந்து , உயர்ந்து வளர்ச்சி கண்டது !பொருளாதாரம் ,
அறிவியல் ,சனநாயகம் , சமத்துவம் , கல்வி ,வாழ்க்கை ,சமயம் , என , தனி மனித விழுமியங்களுக்கு ,பொருள் , கூறி நின்றது! அன்று ,கிழக்கு ,ஜேர்மன் ,உறவுகளுக்கு , உதவும் 
வழியாக , அகதி நிலை வழங்கி உதவும் பொருட்டு ,நாட்டின் ,விதிகள் ,மூலம் , வாழ்வுரிமை ,
வழங்கப்பட்டது .இதன் ,அடிபடையில் , எங்கெங்கு ,உயிர் ,வாழ்வுக்கு ,இடர் , கண்டாலும் ,
அவர்களை .தனது ,நாட்டில் தங்கவும் , தனது ,நாட்டு மக்களை போல , வசதிகள் ,வழங்கி ,
ஏன் ,நிரந்தரக் குடிகளாகவும் ,தக்க காரணங்கள் ,இல்லாவிடின் ,சொந்த நாடுகளுக்கு ,செல்ல 
உதவியும் தந்தார்கள் ,என்பது ,யாவரும் அறிந்த ஒன்று!மேற்கு ,ஐரோப் பிய நாடுகளிலும் 
இந்நிலை ,நிலவினாலும் ,ஜேர்மன் நாட்டின் ,வசதிகள் ,ஏனைய ,நாடுகளில் ,சிறிது ,மட்டம் 
என்றே கூறலாம் !


புகலிட தமிழரின்  ஜேர்மன் வருகை 

தமது ,தாய் ,நாட்டில் , நிலவிய ,அசாதாரண ,நிலைமைகளை ,தவிர்க்கும் 
முகமாக , குறிப்பாக ,இளைஞர் ,நடுவயதினர் ,போன்றோர் ,பல்வேறு ,
வழிகளில் ,சென்று ,வாழத் தலைப்பட்டார்கள் !அன்று , திருமணமாகி ,
இளம் மனைவி ,பிள்ளைகள் ,தாய் ,தந்தை ,  உடன்பிறப்பு , உறவு , நட்பு 
என ,பிறந்து ,வளர்ந்து ,கல்வி ,கற்று மகிழ்ந்து ,வாழ்ந்து ,நாற்பது ,தாண்டி 
விட்ட ,என் போன்றோரும் ,ஒருசிலர் ,அதில் அன்று அடக்கம் !,எம்போன்றோர் ,எந்த நோக்கத்துக்காக வந்தோமோ ,அந்த நோக்கத்தில் ,மண் விழுந்த கதை 
போல ,இரண்டு ஆண்டு களுக்கு ,வேலை செய்ய முடியாது " ,என்ற தடை விதிக்க பட்டது !கண்ணில் கண்டவளை ஆசைகொண்டு ,கட்டியவளை  கைவிட்ட கதை ,போல ,ஆகிவிட்டதே , பொருளும் அழிந்து போனதே ,என்ற   
கவலை ,ஏற்பட்டு ,"போன மச்சான் ,திரும்பி வந்தான் பூமணத்தோடு ..."என்று 
ஊர் ,திரும்பி போனவர் பலர்!இரண்டு வருடங்கள் முடிய ,சிறிய வேலைகள்  
செய்ய அனுமதி கிடைத்து ,"தொழில் " ஈடுபட்டு ,வருவாய் ,வீடு ,வசதி ,குடும்பம் என  வாழ்க்கை ,ஆரம்பமாகியது ! இளைய வயதினர் ,திருமண ம் ,செய்ய ,ஆர்வம் காட்டினர் !இதே ,நடை முறை ,ஏனைய  ஐரோப்பிய ,நாடுகளிலும் ,இருந்தாலும் ,அனைவரும் ,லண்டன் ,சென்று ,அடைய ஆவல் கொண்டவர்களாக மாறி , அவதிகளை ,சந்தித்தனர் !வேறு சிலர் ,கனடா ,அமெரிக்கா ,மற்றும் உறவினருடன் ,இணைய விரும்பி யும் ,திருமணம் செய்யும் பொருட்டும் நாடு கடந்தனர் !